×

சொந்தமா வீடு கூட இல்ல; ஒரே ஒரு ஆடி கார் மட்டுமே.. 20 மணி நேரம் உழைத்து சம்பாதித்தார் : ஆபாச யுடியூபர் மதனின் மனைவி கிருத்திகா பேட்டி

சென்னை : பப்ஜி மதன் மீது முகாந்திரம் ஏதும் இல்லாமல் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி கிருத்திகா குற்றஞ்சாட்டினார்.ஆபாச பேச்சு, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எந்த முகாந்திரமும் இல்லாமல் மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் கடுமையாக பணியாற்றுகிறார்; 4 மணி நேரம் மட்டுமே ஓய்வு எடுக்கிறார்.

மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சட்டரீதியாக எதிர்கொள்வேன்; அவர் பணமோசடி எதையும் செய்யவில்லை, கடந்த 10 ஆண்டுகளாக மதன் எந்த சொத்துகளையும் வாங்கவில்லை. மதனுடன் ஆபாசமாக பேசும் பெண் குரல் என்னுடைய குரல் இல்லை. யூடியூபில் பப்ஜி விளையாட்டில் பேசியது என் குரல் தான் என பரவிய தகவல் தவறானது. யூடியூப் சேனலுக்கு நான் அட்மின் இல்லை. அதற்கான வங்கிக் கணக்கு மட்டுமே என் பெயரில் உள்ளது.

மதன் மீது இதுவரை 4 பேர் மட்டுமே புகார் கொடுத்துள்ளனர்.100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்ததாக கூறுவது தவறு.மதன் வீடுகள் கார்கள் போன்ற சொத்துக்களை வாங்கி குவிக்க வில்லை. நாங்கள் சொந்த வீட்டில் வசிக்கவில்லை. எங்களிடம் 2 சொகுசு கார்கள் இல்லை. ஆடி ஏ6 கார் மட்டுமே உள்ளது. அவர் வைத்திருந்த ஆடி காரும் மதன் பெயரில் இல்லை. போலீஸ் பறிமுதல் செய்த மற்றொரு ஆடி கார் எங்களுடையது அல்ல. யாருடையது என அவர்கள் தெரிவிக்க வேண்டும்.யுடியூப் சேனலை முடக்கியுள்ளதால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Audi ,Kritika ,Madan , மனைவி கிருத்திகா
× RELATED ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி:...