×

மேற்கு வங்கத்தில் சட்ட மேலவையை கொண்டு வர நடவடிக்கை : இடைத்தேர்தல் நடக்காவிட்டால் மேலவை உறுப்பினராக மம்தா பானர்ஜி திட்டம்!!

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் சட்ட மேலவை உருவாக்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்ய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலின் போது, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பாஜகவின் சுவேண்டு அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். தற்போது அவர் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளதால் 6 மாதங்களுக்குள் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே சட்டமேலவை உருவாக இடைத் தேர்தலை சந்திக்காமல் சட்ட மேலவை உறுப்பினராகி விட மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது நடைபெற்று வரும் மேற்கு வங்க சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்ட மேலவையை உருவாக்குவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.மேற்கு வங்கத்தில் 1952ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த சட்ட மேலவை 1969ம் ஆண்டு கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : West Bengal ,Mamata Banerjee , சட்டமேலவை
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி