×

விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி!: சாதனை படைக்க டோக்கியோ ஒலிம்பிக் செல்லும் தமிழக ஏழை வீராங்கனை.. குவியும் பாராட்டு..!!

மதுரை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து மதுரையை சேர்ந்த ஏழை பெண் ரேவதி உட்பட மேலும் 5 பேர் தகுதி பெற்றுள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் கலப்புத்தொடர் ஓட்ட பிரிவில் தமிழகத்தை சேர்ந்த ஆரோக்கிய ராஜு, நாகநாதன் பாண்டி, ரேவதி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் ரேவதி மதுரையில் மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர். 23 வயதான ரேவதி, சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர். பாட்டி ஆரம்மாளின் முழு அரவணைப்பில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த இவர், தற்போது  ஒலிம்பிக் செல்லும் 400 மீட்டர் கலப்புத்தொடர் ஓட்ட அணியில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தொடக்கத்தில் காலணி கூட வாங்க முடியாமல் கஷ்டப்பட்டவர், இன்று சர்வதேச அரங்கில் தமிழகத்தின் பெயரை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பாட்டியாலாவில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதி போட்டியில் 53.55 வினாடிகளில் மின்னல் வேகத்தில் இலக்கை எட்டி முதலிடத்தை பிடித்து பலரையும் ரேவதி வியக்க வைத்துள்ளார். மாநில மற்றும் தேசிய தடகள போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை ரேவதி வென்றுள்ளார். ஆசிய தடகள சான்பியன்ஷிப் மற்றும் சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்றுள்ள ரேவதி, தற்போது மதுரையில் ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதை பெரும் பாக்கியமாக கூறும் ரேவதி, தற்போது பாட்டியாலாவில் அணியினருடன் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்.


Tags : Vida ,Tamil Nadu ,Tokyo Olympics , Hard work, achievement, Tokyo Olympics, Tamil Nadu poor athlete
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...