×

திருச்சி மத்திய மண்டல மருத்துவமனைகளில் 2138 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பயன்பாட்டில் உள்ளது

திருச்சி : திருச்சி மத்திய மண்டல மருத்துவனைகளில் 2138 செறிவூட்டிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் அதிகரித்து கொண்டே இருந்தது. குறிப்பாக மேமாதத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை உச்சத்தை அடைந்தது. இந்த காலக்கட்டத்தில் ஆக்சிஜன் படுக்கைகளின் தேவை அதிகரித்து கொண்டே இருந்தது.

எனவே தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பணியை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது. மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு தரப்பினர் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் ெசறிவூட்டிகளை நன்கொடையாக வழங்கினர். இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனைத்தும் அரசு மருத்துவமனைகள், புதிதாக உருவாக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்களுக்கு வழங்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன்படி கடந்த 7ம் தேதி, திமுக ஆட்சி அமைந்த பிறகு அரசு மருத்துவமனைகளுக்கு 7400 ஆக்சிஜன் ெசறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 7ம் தேதிக்கு முன்பாக தமிழகத்தில் அரசு மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்களில் 2268, தனியார் மையங்களில் 1106 என்று மொத்தம் 3374 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இருந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி நிலவரப்படி, அரசு மையங்களில் 9731 ெசறிவூட்டிகளும், தனியார் மையங்களில் 2727 என மொத்தம் 12,458 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தமிழகத்தில் உள்ளது.

இதில் திமுக ஆட்சி அமைந்த பிறகு அரசு மருத்துமனைகளுக்கு 7463 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதைப்போன்று தனியார் மருத்துவமனைகளில் 1621 செறிவூட்டிகள் கூடுதலாக வாங்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 2610 செறிவூட்டிகளும், சென்னையில் மொத்தம் 604 ெசறிவூட்டிகளும் உள்ளது. திருச்சி மத்திய மண்டலத்தில் திருச்சியில் 376, புதுக்கோட்டையில் 173, கரூரில் 278, அரியலூரில் 213, பெரம்பலூரில் 198, தஞ்சாவூரில் 557, திருவாரூரில் 91, நாகையில் 252 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Central Zone , Trichy, Oxygen concentrators, GOvernment Hospital, Oxygen Bed
× RELATED பேராவூரணியில் நீதிபதி முன்னிலையில்...