×

அச்சுறுத்தும் கொரோனா 2வது அலை: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 18.49 கோடியை தாண்டியது: 40 லட்சம் பேர் உயிரிழப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,000,318 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 184,912,724 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 169,281,333 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 77,762 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.49 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.49 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.92 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.16 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 77 ஆயிரத்து 700-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


Tags : Threatening corona 2nd wave: Global number of victims exceeds 18.49 crore: 40 lakh deaths
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...