×

இந்துத்துவா சிந்தனை குறித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் நடந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் மரபணுவும் ஒன்றுதான். இந்தியாவில் முஸ்லிம்கள் தங்கக்கூடாது என்று ஒருவர் வெறுப்புடன் கூறினால், வெறுப்பைக் காட்டினால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது. சிலர் பசு காவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் இது இந்துத்துவாவிற்கு எதிரானது’’ என்றார், பகவத்தின் இந்த பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாசுதீன் ஒவைசி தனது டிவிட்டர் பதிவில், ‘கலவரம் செய்வது, கொலை செய்வது போன்றவை தான் கோட்ஸே இந்துத்துவா சிந்தனை. இதன் விளைவாக தான் முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இந்த கிரிமினல்களுக்கு பசுவுக்கும், எருமைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் ஜூனைத், அக்லக், பெஹ்லு, அக்பர், அலிமுதீன் என்ற பெயர் வைத்திருப்பவர்களை அடித்துக் கொல்ல வேண்டும் என்று மடடும் தெரிகிறது’ என்றார்.

‘உங்கள் வார்த்தைகள் உண்மை என்றால், முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்திய உங்கள் பாஜ தலைவர்களை பதவியிலிருந்து நீக்குங்கள்’ என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறி உள்ளார். ‘பகவத் சொல்வதற்கும் சங்பரிவார், பாஜ மற்றும் பாஜ அரசின் செயல்களும், வார்த்தைகளும் வேறுமாதிரி இருப்பதை அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்’ என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறி உள்ளார்.

Tags : RSS ,Bhagwat ,Hindutva , Hindutva Thought, RSS, Opposition
× RELATED ஆர்எஸ்எஸ், சங் பரிவாரால்...