×

அமேசான் புதிய சிஇஓ பதவியேற்பு

வாஷிங்டன், ஜூலை 6: கடந்த 1994ம் ஆண்டு அமேசான் நிறுவனத்தை தொடங்கிய ஜெப் பெசோஸ் அதனை உலகின் முன்னனி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக மாற்றினார். 120 லட்சம் கோடி மதிப்பிலான அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 27 ஆண்டுகள் பதவி வகித்த பெசோஸ்  ஜூலை 5ம் தேதி முதல் பதவி விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தார். அந்தப் பதவிக்கு அமேசானின் இணையவழிச் சேவைகளுக்கு பொறுப்பாளராக இருந்த ஆண்டி ஜாஸே-வை   பெசோஸ்  நியமித்துள்ளார். இதன்படி, பெசோஸ் நேற்று பதவி விலக, ஆண்டி ஜாஸே புதிய சிஇஓவாக பொறுப்பேற்றுள்ளார்.

Tags : Amazon , Amazon, CEO, inauguration
× RELATED அமேசான் காடுகளில் சட்டவிரோதமாகச்...