விம்பிள்டன் காலிறுதியில் பிளிஸ்கோவா

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றுள்ளார். நான்காவது சுற்றில் ரஷ்யாவின் லியுட்மிலா சாம்சனோவாவுடன் (22 வயது, 65வது ரேங்க்) நேற்று மோதிய பிளிஸ்கோவா (29 வயது, 13வது ரேங்க்) 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 15 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 4வது சுற்றில் போலந்து நட்சத்திரம் இகா ஸ்வியாடெக் (20 வயது, 7வது ரேங்க்), துனிசியாவின் ஆன்ஸ் ஜாபியருடன் (26 வயது, 21வது ரேங்க்) மோதினார். கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டை 7-5 என கைப்பற்றி ஸ்வியாடெக் முன்னிலை பெற்றார். எனினும், 2வது மற்றும் 3வது செட்டில் அதிரடியாக விளையாடிய ஜாபியர் 6-1, 6-1 என மிக எளிதாக வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.), அரினா சபலென்கா (பெலாரஸ், 2வது ரேங்க்) ஆகியோரும் 4வது சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), டெனிஸ் ஷபோவலாவ் (கனடா), மேட்டியோ பெரட்டினி (இத்தாலி), கரென் கச்சனோவ் (ரஷ்யா) ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

Related Stories: