×

கோபா கோப்பை அரையிறுதி: அர்ஜென்டினா ஆதிக்கம் தொடருமா?

பிரெசில்லா: கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து தொடரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும்  அர்ஜென்டினா இன்று நடைபெறும் அரையிறுதியிலும் கொலம்பியாவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து தொடரின் முதல்  அரையிறுதி  இன்று அதிகாலை நடைபெற்றது.  ரியோ டி ஜெனீரோ நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரேசில் - பெரு அணிகள் மோதின. தொடர்ந்து இந்திய  நேரப்படி  நாளை காலை 6.30 மணிக்கு நடைபெறும் 2வது அரையிறுதியில்  அர்ஜென்டினா - கொலம்பியா அணிகள் மோதுகின்றன.

இந்த தொடரில் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக  அர்ஜென்டினா திகழ்கிறது. லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் சிலியுடன் டிரா செய்த  அந்த அணி, பின்னர் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது.  கேப்டன் லியோனல் மெஸ்ஸி, ஏஞ்சல் டி மரியா, கோல்கீப்பர் எமிலியனோ, லிசாண்ட்ரோ, கோம்ஸ்... என பலரும் கலக்குவதால்  கொலம்பியா அணிக்கு கண்டம்தான். ஆனாலும் போராடி  நாக் அவுட்  சுற்றுக்குள் நுழைந்த கொலம்பியா,  வலுவான உருகுவேயை ஆட்டம் முடியும் வரை கோலடிக்க விடாததுடன், பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. அதற்கு காரணம்  கேப்டனும் கோல்கீப்பருமான  டேவிட் ஒஸ்பினா தான். அவருக்கு மிகுயல் போர்ஜா, துவன் ஸ்பாதா எல் ஆஸ்கர் முரியலோ, குஸ்டோவோ குயெலார், லூயிஸ் டியஸ் என பலரும் கை கொடுப்பார்கள் என்பதால் அர்ஜென்டினாவும் நிச்சயம் சவாலை சந்திக்க வேண்டி இருக்கும்.

நேருக்கு நேர்...

அர்ஜென்டினா - கொலம்பியா அணிகள் 1945 முதல் இதுவரை  40 சர்வதேச ஆட்டங்களில் சந்தித்துள்ளன. அதில் அர்ஜென்டினா 23, கொலம்பியா 9 ஆட்டங்களில் வென்றுள்ளன. எஞ்சிய 8 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

கோபா களத்தில்...

கோபா கோப்பை தொடர்களில் இந்த 2 அணிகளும் 14 ஆட்டங்களில் மோதியுள்ளதில் அர்ஜென்டினா 9, கொலம்பியா 3 வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டிரா.

Tags : Copa del Rey semi-final ,Argentina , Copa Cup, Argentina
× RELATED அர்ஜெண்டினாவில்...