லக்ஸம்பர்க் பிரதமர் கவலைக்கிடம்

புருசல்ஸ்: லக்ஸம்பர்க் நாட்டின் பிரதமர் பெட்டல் (48). கடந்த ஒரு வாரமாக காய்ச்சல், இருமல், தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பெட்டலுக்கு நடத்திய சோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ‘பெட்டல் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளது. அவர் இன்னும் 4 நாள் மருத்துவமனையில் இருந்தபடி சிகிச்சை மேற்கொள்வார்’ என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: