×

பாமக 19வது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு

சென்னை: சென்னையில் நேற்று, பாமகவின் 2021-22ம் ஆண்டிற்கான 19வது பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் காணொளி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது, நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: 123 தலைப்புகளில் 481 பரிந்துரைகள் இந்த நிழல் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அடுத்த 5 ஆண்டு காலத்தில் இதை நிறைவேற்றினால் தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கும்.

புதிய அரசிற்கு வழிகாட்டியாக இந்த நிழல் நிதி அறிக்கை இருக்கும். தற்போது  தமிழகத்தின் நிதிநிலை மோசமான நிலையில் இருக்கிறது. 2020-2021 ஆண்டில் ரூ.88 ஆயிரத்து 51 கோடி கடனாக அரசு பெற்றுள்ளது. வரும் ஆண்டில் இது அதிகரிக்கலாம். இதைத்தொடர்ந்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பேசியதாவது: அரசின் வருவாய் பற்றாக்குறை 3 மடங்கு அதிகரித்துள்ளது. அரசின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக மின்துறை நஷ்டத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அடுத்த 3 ஆண்டுகளுக்கு இருக்கும். தமிழக அரசு பொருளாதார குழு அமைத்ததை வரவேற்கிறேன். இவ்வாறு பேசினார்.

Tags : Bamaga , Release of Bamaga 19th Shadow Financial Statement
× RELATED திண்டிவனத்தில் வாக்களித்த ராமதாஸ், அன்புமணி