×

கேப்டன் என்றால் முதலில் நினைவுக்கு வருவது டோனி தான்: கே.எல்.ராகுல் நெகிழ்ச்சி

லண்டன்: இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது: கேப்டன் என்றால் எங்கள் நினைவுக்கு முதலில் வரும் பெயர் டோனி மட்டுமே. ஏனென்றால் நாங்கள் அனைவரும் டோனியின் காலத்தில் விளையாடியுள்ளாம். அவர் ஒரு சகாப்தம். இப்போது இந்திய அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் டோனியின் தலைமையில் விளையாடி இருக்கிறோம். நான் அவரிடம் முக்கியமான ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டு இருக்கிறேன்.

அது வாழ்வில் ஏற்றமோ தாழ்வோ, எப்போதும் ஒரே மன நிலையில் இருப்பது, நாட்டை முன்னிலைப்படுத்துவதுதான். அவர் பல சாதனைகளை செய்தாலும் நான் பெருமையாக நினைப்பது, அவர் சக வீரர்களை மரியாதையாக நடத்துவது. அவரின் இந்த நடத்தைக்காகவே, அவருக்காக நாங்கள் எந்தவித யோசனையுமின்றி துப்பாக்கி குண்டுகளைக் கூட தாங்கிக்கொள்ள தயாராக இருந்தோம், என்றார்.



Tags : Tony ,KL Rahul , The first thing that comes to mind if you are the captain is Tony: KL Rahul Flexibility
× RELATED ஸ்டொய்னிஸ் 124, கெய்க்வாட் 108* ரன் விளாசல் வீண்: சென்னையை வீழ்த்தியது லக்னோ