×

வருமான வரித்துறை நோட்டீஸை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் மனு தள்ளுபடி

சென்னை: வருமான வரித்துறை நோட்டீஸை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம், மனைவி ஸ்ரீநிதி மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 2014-15, 2015-16 ஆண்டுகளுக்கான வருமான வரி மறுமதிப்பீட்டு நோட்டீஸை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. 2015ல் விற்பனை செய்த நிலத்திற்காக பெற்ற ரூ.6.38 கோடி வருமானத்தை மறைத்ததாக ஐடி மறுமதிப்பீடு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐடி கணக்குகளுக்கான மறுமதிப்பீடு தொடங்காத நிலையில் நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags : Kharthi Duttamaram , karthi chidambaram
× RELATED சீட் கொடுக்காததால் விரக்தி; நான்...