×

திருப்போரூர் அரசு மகளிர் பள்ளியில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்க கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று  திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, 11ம் வகுப்பில் ஆங்கில வழி அறிவியல் பாடப்பிரிவு, கணிதத்துடன் கூடிய கணினி அறிவியல், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை தொடங்க அனுமதி பெற்றுத்தரவேண்டும் என பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ, இந்த கல்வியாண்டிலேயே பாடப்பிரிவுகளை தொடங்க முயற்சி எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags : Thiruporur Government Girls School , Request to start new courses at Thiruporur Government Girls School
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...