×

வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5000 உதவித்தொகை.. தமிழகத்தில் தமிழர்களுக்கு மட்டுமே அரசு வேலை: ராமதாஸ் அறிக்கை

சென்னை : சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் பாமக சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2021-22 ம் நிதி ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.  கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் காணொலி மூலமும் , கட்சியின் தலைவர் ஜி.கே.மணி நேரிலும் பங்கேற்றார்.

நிதி நிலை அறிக்கையௌ  வெளியீட்டு பேசிய ராமதாஸ்

126 தலைப்புகளில் 481 பரிந்துரைகள் இந்த நிழல் நிதி நிலை அறிக்கையில்  உள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டு காலத்தில் இதை நிறைவேற்றினால் தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் ஆட்சியில் இருக்கும் புதிய அரசிற்கு வழிகாட்டியாக இந்த நிழல் நிதி அறிக்கை இருக்கும் என்றும் தமிழகத்தின் நிதிநிலை மோசமான நிலையில் இருப்பதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.

பாமக நிழல் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

1) 2021 -22 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் 4 லட்சத்து 98 ஆயிரத்து 585 கோடியாக இருக்கும். இதுகடந்த ஆண்டு வருவாயை விட 2 லட்சத்து 22 ஆயிரத்து 125 கோடி அதிகமாக இருக்கும்.

2)கொரோனா வைரஸ் தொற்று பரவலால் பொருளாதாரம் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

3) 2020 - 21 ஆம் ஆண்டில் அரசின் வரி வருவாய் 17.64 சதவீதம் குறைந்துள்ளது.

4)2020 21 ஆம் ஆண்டில் தமிழக அரசின் மொத்த வருவாய் 2 லட்சத்து 18 ஆயிரத்து 991 கோடியாக இருக்கவண்டும்.

5)வேலையில்லா இளைஞர்களுக்கு 5 ஆயிரம் உதவித்தொகை ,ஏழை குடும்பங்களுக்கு மாதம் 2000 ரூபாய்

6)தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 15 முதல் முழுமையான மதுவிலக்கு.

7)நேர்முகத் தேர்வுகள் இரத்து, தமிழர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு ,வலிமையான லோக் ஆயுக்தா ,பொதுசேவை உரிமை சட்டம், மின் கட்டணம் குறைப்பு.

8)தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் ஜனவரி மாதம் தேர்தல் நடத்துதல்...

9) புதிய கல்விக் கொள்கையில் உள்ள சாதகமான அம்சங்கள் மட்டும் செயல்படுத்தப்படும். ஒத்துவராத அம்சங்கள் செயல்படுத்தப்படாது.

10) பள்ளிக் கல்வித் துறைக்கு தனி நிதியம்

11) கல்விக் கடன்கள் தள்ளுபடி. மருத்துவ ஸ்மார்ட் அட்டை எண் ,அனைத்து ஜாதியினருக்கும் உள் ஒதுக்கீடு.

12)கோதாவரி காவிரி இணைப்பு திட்டம், சென்னை சேலம் எட்டு வழி சாலை ரத்து,
சந்தைகளுக்கு இலவச பேருந்து,
பெண் குழந்தைகளுக்கு 5 லட்சம் நிதி.

13) வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து மக்களுக்கும் முழுமையான சமூக நீதி வழங்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு. நடத்தப்படும்.

14) செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்துதல்.

15) கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் நிதி.

Tags : Tamil Nadu ,Ramadas , பாமக
× RELATED ஓய்வுக்கு பிறகு மீண்டும் பிரசாரம்: ராமதாஸ் கடிதம்