×

திருயம் பகுதிகளில் நிறுத்தப்பட்ட 21 வழித்தடங்களில் மீண்டும் சேவை துவங்கப்படும்

திருமயம் : புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அடுத்த லெட்சுமிபுரத்தில் புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து சேவையை அமைச்சர் ரகுபதி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் கவிதா ராமு தலைமை வகித்தார். நிதழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கம் துவக்கப்பட்டு வருகிறது. அதன்படி லெட்சுமிபுரம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதி பொதுமக்கள் புதுக்கோட்டைக்கு நேரடியாக செல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது. இப்பேருந்து காலை 7.50 மணி, 11.35 மணி மற்றும் 4.05 மணிக்கு தினமும் மூன்று நடைகள் இயக்கப்படும். ஏற்கனவே இப்பகுதி பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி பேருந்து வசதி கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இப்பகுதி மகளிர் நகர பேருந்தில் கட்டணமின்றி பயணம் செய்து பயன்பெறலாம்.

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தமிழக முதல்வர் மகளிர் அரசு நகர பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். ஏற்கனவே திருமயம் பகுதிகளில் இயங்கி வந்த 21 வழித்தடங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அந்த வழித்தடங்களில் பொதுமக்களின் வசதிக்காக மீண்டும் பேருந்து சேவை படிபடியாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன், புதுக்கோட்டை ஆர்டிஓ அபிநயா, ஒன்றிய பொறுப்பாளர் சிதம்பரம், வி.லெட்சுமிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvananthapuram , Tirumayam,Pudukottai,New Bus routes,Minister raghupathi
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!