×

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு!: 25 பேர் சுட்டுக் கொலை...பலர் கவலைக்கிடம்..!!

மியான்மர்: மியான்மர் நாட்டின் யாங்கூ நகரில் பொதுமக்கள் 25 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் இருக்கின்றனர். ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டங்களை தடுத்து நிறுத்திய ராணுவம் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. மியான்மரில் இதுவரை 800க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாங்கூ நகரில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த ராணுவத்தினர், போராட்டக்காரர்கள் மீது கண்மூடி தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மியான்மர் நாட்டு ராணுவத்தின் கொடூரமான தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் ஐ.நா தலையிட்டு மியான்மர் ராணுவ அதிகாரிகள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து அமைதியை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.


Tags : Myanmar , Myanmar, military rule, fighting, shootings, 25 killed
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்