கொலம்பியாவில் நிலநடுக்கத்தை தாங்கும் வசதி இல்லாத அரசு கட்டிடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது!!

கொலம்பியா : கொலம்பியாவில் விதிகளுக்கு முரணாக கட்டப்பட்ட அரசு கட்டிடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. போகோடாவில் உள்ள அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடம் நிலநடுக்கம் தாங்கும் வசதி இல்லாதது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்டிடத்தை வெடி வைத்து தகர்க்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.கட்டிடத்தை சுற்றி இருந்த பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு , கட்டிடம் தகர்க்கப்பட்டது.  

நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதிய கட்டிடம் அமைக்க அந்நாட்டு பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது.மிகப்பெரிய அரசு அலுவலகத்தை வெடி வைத்து தகர்க்கும் இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. வெடி வைத்து தகர்க்கப்பட்ட இந்த கட்டிடம் கொலம்பியா நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் தலைமையகமாக சுமார் 59 ஆண்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>