பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி - ரயில் சேவையில் மாற்றம்

ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் மண்டபம் - ராமேஸ்வரம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மண்டபம் - ராமேஸ்வரம் இடையே ஜூலை 14ம் தேதி வரை ரயில்கள் இயக்கப்பட மாட்டாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில், மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்துக்கு பதில் மண்டபத்தில் இருந்து ரயில் புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும். திருச்சியில் இருந்து செல்லும் சிறப்பு ரயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

>