×

நடுக்கடலில் படகு மூழ்கியதில் லிபிய அகதிகள் 43 பேர் பலி!: இத்தாலிக்கு புகலிடம் தேடிச் சென்ற போது பரிதாபம்..!!

துனிசியா: இத்தாலிக்கு புகலிடம் தேடி சென்ற போது நடுக்கடலில் படகு கவிழ்ந்ததால் லிபிய அகதிகள் 43 பேர் உயிரிழந்தனர். துனிசியா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள லிபியாவின் சுவாரா நகரில் இருந்து பெண்கள், சிறுவர்கள் உட்பட சுமார் 130 அகதிகள் படகு ஒன்றில் ஐரோப்பா நோக்கி புறப்பட்டனர். ஆப்பிரிக்காவுக்கு மிக நெருக்கத்தில் உள்ள இத்தாலியின் லம்பேடெசா என்ற தீவுக்கு செல்ல வேண்டும் என்பது அவர்களின் இலக்கு. ஆனால் துனிசியாவின் ஹார்சேஸ் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்த போது இந்த படகு சற்றும் எதிர்பாராத வகையில் கடலில் கவிழ்ந்தது.

இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அப்போது அங்கு படகுகளில் மீன்படித்துக் கொண்டிருந்த மீனவர்கள், துரிதமாக மீட்பு பணியில் இறங்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த துனிசியா கடலோர காவல்படையுடன் இணைந்து நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த 96 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். எனினும் அதற்குள் பெண்கள், சிறுவர்கள் உட்பட 43 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காணாமல் போன 10 பேரை தேடும் பணி முடிக்கிவிடப்பட்டுள்ளது.


Tags : Italy , Mediterranean, boat, Libyan refugees, killed
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்