பிரிந்தாலும் மகிழ்ச்சியுடன்தான் இருக்கிறோம் ஆமிர் கான், கிரண் ராவ் வீடியோ வெளியீடு

சென்னை: பாலிவுட் நடிகர் ஆமிர் கான், தனது மனைவி கிரண் ராவை பிரிந்து விட்டதாகவும், விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்நிலையில், பிரிந்தது ஏன் என்பது குறித்து இருவரும் இணைந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது: திடீரென்று அறிவிக்கப்பட்ட எங்களின் விவாகரத்து முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். கணவன், மனைவி என்கிற உறவை விட்டு மட்டுமே பிரிகிறோம். ஆனால், நாங்கள் எப்போதும் ஒரே குடும்பமாக நட்பு பாராட்டி வாழ்வோம். யாரும் இதை முடிவு என்று நினைக்க வேண்டாம். ஒரு புதிய தொடக்கமாகப் பாருங்கள். கடந்த 15 வருடங்களாக நாங்கள் இணைந்து வாழ்ந்தது ஒரு பொற்காலம். நிறைய சந்தோஷத்துடன் வாழ்ந்து முடித்துவிட்டோம். இனி இருவரும் சுதந்திரப் பறவையாக இருக்க விரும்புகிறோம். ரசிகர்கள் எங்கள் விருப்பத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Related Stories: