அபுதாபி லாட்டரியில் ரூ.40 கோடி பரிசு வென்ற இந்தியர்

துபாய்: அபுதாபியில் ஜூலை மாதத்திற்கான பிக் டிக்கெட் பரிசு குலுக்கலில் கேரளாவை சேர்ந்த ரஞ்சித் சோமராஜன் என்பவருக்கு ரூ.40 கோடி பரிசு கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 2008ம் ஆண்டிலிருந்து வசித்து வரும் கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்த 37 வயதான‌ சோமராஜன் டிரைவராக பணியை தொடங்கினார். தற்போது, தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராகவும், மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக இவர் பரிசு குலுக்கல் டிக்கெட் வாங்கி வருகிறார். வழக்கம் போல், ஜூலை மாதத்திற்கான டிக்கெட்டையும் வாங்கினார்.

இதன் குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது. அதில், சோமராஜன் வாங்கிய டிக்கெட்டுக்கு பரிசு விழுந்தது. இதன் மூலம், இந்திய மதிப்பில் அவருக்கு ரூ.40 கோடி பரிசு கிடைத்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், ‘‘தொடர்ந்து 3 ஆண்டுகளாக பரிசு டிக்கெட்டை வாங்கி வருகிறேன் எப்படியாவது பரிசு கிடைத்து விடாதா என ஏங்கி கொண்டிருந்தேன் தற்போது, கனவு நனவாகி விட்டது. இந்தியா, பாகிஸ்தான் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 10 நண்பர்கள் சேர்ந்து இந்த டிக்கெட்டை என் பெயரில் வாங்கினோம். இந்த பரிசு தொகையை நாங்கள் பகிர்ந்து கொள்ள உள்ளோம்,’’ என்றார்.

Related Stories:

>