×

‘ஸ்மார்ட் தடுப்பூசி’ திட்டத்திற்கு பரிந்துரை; ‘டெல்டா பிளஸ்’ வைரசுக்கு ஒரு ‘டோஸ்’ போதும்!.. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

புதுடெல்லி: உருமாறிய டெல்டா பிளஸ் தொற்றுக்கு எதிராக, கோவிஷீல்டு தடுப்பூசியான ஒப்பீட்டளவில் அதிக பாதுகாப்பைக் கொண்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பரவிவரும் கொரோனாவின் உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றாப், அதிக ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நடத்திய ஆய்வில், டெல்டா பிளஸ் வைரஸ் தடுப்பு குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதன்படி, ஒன்று அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் போட்ட பின்னர் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

உருமாறிய டெல்டா பிளஸ் தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசியான ஒப்பீட்டளவில் அதிக பாதுகாப்பைக் கொண்டுள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்கள், ஒரு டோஸ் போட்டுக் கொண்டாலே வைரஸிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படுத்திய பாதிப்பை போன்று மூன்றாவது அலை கடுமையாக இருக்காது. தடுப்பூசி போடும் திட்டத்தை துரிதப்படுத்தப்படுத்துவன் மூலம், அலைகளின் தாக்கத்தை குறைக்க முடியும். மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் மக்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று ‘ஸ்மார்ட் தடுப்பூசி’ திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கணித மாடலிங் அடிப்படையிலான பகுப்பாய்வு  குறித்த தகவலை பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் (பி.எம்.ஜே) வெளியிட்டுள்ளது.

முக்கியமாக தொழிலாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டும். எல்லோருக்கும் தடுப்பூசி போடுதல் செயல்முறைகளை காட்டிலும், பொது சுகாதாரக் கருத்தாய்வுகளின் அடிப்படையில் ‘ஸ்மார்ட் தடுப்பூசி’ திட்டம் சரியானதாக தோன்றுகிறது. கொரோனாவுக்கு எதிராக அனைத்து முன்னுரிமை தொழிலாளர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு தடுப்பூசி போடுவதன் மூலம், ஒட்டுமொத்த பாதிப்பை குறைக்க முடியும். இதுவரை, கிட்டத்தட்ட 80% சுகாதாரப் பணியாளர்கள், 90% முன்களப் பணியாளர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Medical Research Council of India , Recommendation for the ‘smart vaccine’ program; One dose is enough for the Delta Plus virus! Information of the Medical Research Council of India
× RELATED கடந்த 2013ம் ஆண்டு முதல் மகாராஷ்டிராவில்...