×

சேலம் விநாயகா மிஷனில் பணியாற்றும் 4 மருத்துவர்களுக்கு சாதனையாளர் விருது

சேலம்: உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, சேலம் விநாயகா மிஷனில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவ்விருது, மூட்டு மற்றும் எலும்பு மருத்துவர் பிரகாசம், பொது மருத்துவர்கள் கிருஷ்ணசெட்டி, ஈஸ்வரன், சிறுநீரக மருத்துவர் ஜோன்ஸ் ரொனால்டு ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்களில் டாக்டர் பிரகாசம் 35 வருடங்களாக மருத்துவ துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2011ம் ஆண்டு இந்திய மருத்துவ சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவராக இருந்தவர். இதேபோல், இந்திய மருத்துவ சங்க சேலம் மாவட்ட தலைவராக பதவி வகித்துள்ள டாக்டர் கிருஷ்ணசெட்டி 40 வருடங்களாக மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இவர், சேலம் மாவட்டத்தின் முதல் பொது மருத்துவம் முதுகலை பட்டம் பெற்றவர். இவர்களை போல், டாக்டர் ஈஸ்வரன் மருத்துவ துறையில் 30 வருடங்களாக பணியாற்றி வருகிறார். தமிழக அரசின் மருத்துவ சங்கத்தின் மாநில துணை செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார். இதேபோல், டாக்டர். ஜோன்ஸ் ரொனால்டு 40 வருடமாக மருத்துவ சேவையில் பணியாற்றி வருகிறார். சிறுநீரக சம்பந்தப்பட்ட பல குறிப்புகள் மற்றும் கோப்புகளை தேசிய, மாநில அளவில் பதிப்பாக வெளியிட்டுள்ளார். இவர்கள் 4 பேருக்கும், விம்ஸ் மருத்துவ இயக்குனர் மீனாட்சி சுந்தரம் முன்னிலையில் விநாயகா மிஷன் தலைவர் சந்திரசேகர் விருதுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், டாக்டர் எழில்வேந்தன், டீன் செந்தில்குமார், டாக்டர் அசோக் மற்றும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், மேலாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Salem Vinayaka Mission , Achievement Award for 4 doctors working in Salem Vinayaka Mission
× RELATED சேலம் விநாயகா மிஷனில் பணியாற்றும் 4 மருத்துவர்களுக்கு சாதனையாளர் விருது