பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்: சந்திரன் எம்.எல்.ஏ பங்கேற்பு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ பங்கேற்றார்.  பள்ளிப்பட்டு ஒன்றிய குழு தலைவர் பொன்.ஜான்சிராணி விஸ்வநாதன் (அதிமுக) தலைமையில் ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பசுபதி, அருள் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில் திருத்தணி திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.  ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு மன்ற பொருள்கள் மீது  விவாதம் நடைபெற்றது. மொத்தமாக 36 பொருள்கள்  உறுப்பினர்கள் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.

அதில், ஊராட்சி ஒன்றியம் சார்பாக கிராம ஊராட்சிகளுக்கு பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு, ஹைப்போகுளோரைடு, லைசால் ஆகியவை கொள்முதல் செய்து வினியோகம் செய்யவும்,  ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நிதியிலிருந்து  கொரோனா பரிசோதனை  மாதிரிகள் சேகரிக்க  வாகனத்தை பயன்படுத்தவும் மன்றத்தில்  உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ரத்து செய்யப்பட்ட நிலையில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேறியது. மன்ற உறுப்பினர்கள் பொன் சு.பாரதி, நதியா நாகராஜ், சுகுணா நாகவேலு, உஷா ஸ்டாலின், முத்துரெட்டி, பத்மாவதி கோவிந்தராஜ், முத்துவேல், விநாயகம்மா  உட்பட அனைவரும் கலந்துகொண்டனர்.

Related Stories:

>