×

மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்

பெங்களூரு: மேகதாது அணை கட்டுவதால் தமிழக விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பு  கிடையாது,’ என தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா  கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில் எடியூரப்பா கூறி இருப்பதாவது: தமிழக  முதல்வராக பதவியேற்றுள்ள தங்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த  பாராட்டுகள். காவிரி  ஆற்று நீர் பங்கீட்டு இறுதி உத்தரவு மற்றும் உச்ச நீதிமன்றத்தின்  உத்தரவின்படி பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்குவதற்கு 4.75 டிஎம்சி  தண்ணீரை பயன்படுத்தவும், 400 மெகாவாட் நீர் மின்சாரம் தயாரிக்கவும் அனுமதி  கிடைத்தது. ஆனால், அதற்கான மேகதாது அணை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழக அரசின் சார்பில் பவானி ஆற்றில்  நீர்மின் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த  பிப்ரவரி மாதம் தமிழக அரசின் 2 நீர் மின்சார திட்டத்திற்கு வனத்துறை,  சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அனுமதி வழங்கியுள்ளது.  மேட்டூர் அணை கீழ் பகுதியில் இது போன்ற பிற திட்டங்களை அமல்படுத்தவும்  தமிழக அரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இந்த சூழ்நிலையில்  கர்நாடகா, தமிழகத்தின் நன்மையை கருத்தில் கொண்டு, மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. எந்த பிரச்னை என்றாலும், இருதரப்பு அதிகாரிகள் மூலம் பேசி  தீர்வு காணலாம். மேகதாது அணையால் தமிழக விவசாயிகளுக்கு எவ்வித  பாதிப்பு கிடையாது. இது, 2 மாநிலத்திற்கும் நன்மை பயக்கும் திட்டமாகும். இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Tags : Maehara ,Tamil Nadu ,Q. Edurepa ,Stalin , Eduyurappa's letter to Chief Minister MK Stalin: Dam construction in Meghadau has no impact
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...