×

மாவட்ட பஞ். தேர்தல் பாஜ அமோக வெற்றி சமாஜ்வாடி படுதோல்வி

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மொத்தம் 3 ஆயிரம் பஞ்சாயத்துகள் உள்ளன. இவற்றில் 75 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், 67 இடங்களில் பாஜ வெற்றி பெற்றுள்ளது.  அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 6 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. உபி பாஜ தலைவரான சுவதந்திர தேவ் சிங் கூறுகையில், ‘‘இது அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னோட்டம்’’ என்றார். தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக பல இடங்களில் சமாஜ்வாடியினர் போராட்டம் நடத்தினர்.


Tags : District Panch ,BJP ,Bajaj ,Samajwadi Party , District Panch. BJP wins by a landslide: Samajwadi Party loses
× RELATED புலம்பெயர்ந்தவர்கள் தமிழ்நாட்டில்...