கூகுள், அமேசான் பண பரிமாற்றத்தால் வங்கிகளுக்கு ஆபத்து ரிசர்வ் வங்கி கவலை

புதுடெல்லி: கூகுள் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும்  தற்போது ஆன்லைன் பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. தங்களின் ஆப்கள் மூலமாக வங்கி பணப் பரிவர்த்தனைகளை செய்பவர்களுக்கு இவை கேஸ் பேக் சலுகை போன்றவற்றையும் அளித்து வருகின்றன. மேலும், எதிர்காலத்தில் இவை சில்லரை வர்த்தக பணப் பரிமாற்றத்திலும் ஈடுபட திட்டமிட்டுள்ளன.

இது குறித்து நிதி கொள்கை நிலைத்தன்மை குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சில்லறை வணிக பண பரிமாற்ற  சேவையை, தொழில்நுட்ப நிறுவனங்களும், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும்  வழங்குவது, வங்கிச் சேவைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மேலும், இதன்மூலம் நிதிச் சந்தையில் இந்த நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு ஏற்படும்.  இந்த நிறுவனங்களின் மூலம் மிகப் பெரிய அளவில் பண பரிமாற்றம் நடப்பதால், மக்களின் ரகசிய தகவல்களை பாதுகாப்பது, இணையதள பண மோடி குற்றங்கள் நடப்பதை  தடுப்பது போன்றவை மிகப்பெரிய சவாலாக மாறிவிடும்,’ என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: