கொடைக்கானலுக்கு விரைவில் ஹெலிகாப்டர் சேவை

கொடைக்கானல்: தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உள்ளது. இங்கு சீசன் நேரங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும். கொடைக்கானலில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக ஹெலிகாப்டர் தளம் அமைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கலெக்டர் விசாகன், கொடைக்கானல் சின்னபள்ளத்தில் உள்ள அரசு நிலத்தில் ஹெலிகாப்டர் இறங்கும் தளத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பகுதியை ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர், ‘‘ஹெலிகாப்டர் தளம் குறித்து அரசுக்கு அறிக்கை தெரிவித்த பிறகே இறுதி செய்யப்படும்’’ என்றார். இந்த ஆய்வின் மூலம் கொடைக்கானலில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>