காமராஜர் பிறந்த நாளை கொரோனா விழிப்புணர்வு நாளாக கொண்டாடுவோம்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆர்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காமராஜர் பிறந்தநாளை கொரோனா விழிப்புணர்வு நாளாக கொண்டாட உள்ளோம். தடுப்பூசி 100% அவசியம் என்பதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம். வருகிற திங்கள் கிழமை முதல் தென் மாவட்டங்கள் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் கட்சிகள் மாணவர்களை குழப்ப வேண்டாம். ஜனநாயக நாட்டில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது அனைவரின் ஆசை தான். எனவே, உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். அதிமுக உடனான கூட்டணி தொடரும். கொரோனா காலக்கட்டத்தில் எல்லா கட்சியினரும் ஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட வேண்டும்.

Related Stories:

More