அரிவாளால் கேக் வெட்டிய ரவுடி கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் நடந்து சென்ற நபரிடம் சிலர் வழிப்பறியில் ஈடுபட்டதாக முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக முத்தையாபுரம் போலீசார் 5 ரவுடிகளை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பிடிப்பட்டவர்களில் ஒருவரான பானா வேல்முருகன் (29) என்பவரின் செல்போனை சோதனையிட்டபோது அரிவாளால் கேக் வெட்டி அவர் பிறந்தநாள் கொண்டாடியது தெரியவந்தது.

இதற்கு உடந்தையாக அவரது தம்பி மாரிச்செல்வம் (23), நண்பர்கள் இசக்கி செல்வம் (26), டைட்டஸ் (21), கவுதம் (19) ஆகியோர் இருந்துள்ளனர். மேலும்  பிறந்தநாள் கொண்டாடியதில் அவர்களிடம் இருந்த பணம் செலவழிந்து விட்டதால் வழிப்பறியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories:

>