×

கடலூரில் கர்ப்பிணிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்: உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

திட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு துவக்க விழா இன்று காலை நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற மதிப்பீட்டு குழு உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனையை திறந்து வைத்தார். மேலும், மருத்துவமனையில் ஆய்வு செய்து, நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் திட்டக்குடி அரசு திருவள்ளுவர் கல்லூரியில் 150 படுகை வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய கொரோனா மருத்துவமனையை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ திறந்து வைத்து, பார்வையிட்டார். மேலும், அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்களுடன் கலந்துரையாடினார். இதனை தொடர்ந்து திட்டக்குடி தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 2,600 குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர், கீழ்ச்செருவாய் கிராமத்தில் அமைந்துள்ள வெலிங்டன் நீர்த்தேக்கத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக திட்டக்குடி வதிஷ்டபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். மேலும், குறிஞ்சிப்பாடி, அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தொகுப்பினையும், அரசு நலத்திட்ட உதவிகளையும் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.


Tags : Corona Vaccination ,Katalur ,Stalin , Corona Vaccination Camp for Pregnant Women in Cuddalore: Launched by Udayanithi Stalin
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...