விம்பிள்டன் டென்னிஸ்: 4வது சுற்றில் ஒன்ஸ்ஜாபூர், மேடிசன் கீஸ்

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 7-5, 6-3 என்ற செட் கணக்கில், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்சை வீழ்த்தினார். துனிசியாவின் ஒன்ஸ் ஜாபூர், 5-7,6-3,6-2 என்ற செட் கணக்கில், ஸ்பெயினின் முகுருசாவை சாய்த்தார். 2ம் நிலை வீராங்கனை பெலாரசின் ஆரினா சபாலென்கா, 6-0, 6-3 என கொலம்பியாவின் மரியா கமிலாவை வென்றார்.

ஆடவர் 3வது சுற்றில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார். கலப்பு இரட்டையரில் இந்தியாவின் போபண்ணா, சானியா மிர்சா ஜோடி, 6-1,7-6 என இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், அங்கிதா ரெய்னா ஜோடியை வீழ்த்தியது.

Related Stories: