×

பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பின் போது நீட் தேர்வு குறித்து எதையும் பேசவில்லை: எல்.முருகன் டெல்லியில் பகிரங்க பேட்டி

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பின் போது நீட் தேர்வு குறித்து எதையும் பேசவில்லை என டெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் பாஜ கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி.சரஸ்வதி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி லோக் கல்யான் மார்க் பகுதியில் இருக்கும் அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினர். இதில் தமிழகம் தொடர்பான அனைத்து விவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து பிரதமருடனான ஆலோசனைக்கு பின்னர் நிருபர்களை சந்தித்த மாநில தலைவர் எல்.முருகன் கூறியதில்,தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்ப்பில் நான்கு பேர் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர். இதில் தமிழகத்தில் பாஜ காலூன்ற முடியாது என எதிர்க்கட்சிகள் கூறியதை முறியடித்து தற்போது சட்டமன்றத்தில் தூண்களாக உள்ளோம். இதையடுத்து இன்றுபிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம். அப்போது தமிழகத்தின் வளர்ச்சி குறித்து பல்வேறு கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டது. அதில் முக்கியமாக தமிழகத்தில் ராமேஸ்வரம், மகாபலிபுரம், தஞ்சை உள்ளிட்ட ஆன்மீகம் மற்றும் சுற்றுலா தளங்களை மேம்படுத்துதல், ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை பயன்படுத்துவது ஆகியவை குறித்தும் ஆலோசனையின் போது பேசப்பட்டது.

இதைத்தவிர தமிழக அரசியலில் நடைபெறும் தேசப் பிரிவினை வாத செயல்பாடுகளையும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம்.மேலும் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி கொண்டு இருக்கிறார்கள். இதில் உச்ச நீதிமன்றதின் தீர்ப்பின் அடிப்படையில் தான் நீட் கொண்டுவரப்பட்டது. அதிலிருந்து கண்டிப்பாக விலக்கு பெற முடியாது என தெரிந்தும் தேர்தல் அறிக்கையில் கொண்டு வரப்பட்டது. அதனால் தான் நாங்கள் நீட் குறித்து பிரதமரிடம் எதுவுமே பேசவில்லை. மேலும் நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள குழுவானது அதில் இருக்கும் சாதகங்களை கேக்கமால், பாதங்களை மட்டுமே கேட்டு வருகின்றது. இதைத்தவிரதமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என பிரதமரிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். அதனை கேட்ட அவர் தடுப்பூசி குறித்த புள்ளி விவரங்களை கணக்கெடுத்து ஊடகங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், அதெப்போன்று மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் எங்களிடம் அறிவுறுத்தினார். இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.

Tags : Need ,Narendra Modi ,Murugan Deli , எல்.முருகன்
× RELATED அரசு முறைப் பயணமாக ஜூலை 8-ம் தேதி ரஷ்யா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி