×

ஜப்பானில் பயங்கர நிலச்சரிவு... மண்ணில் புதைந்த குடியிருப்புகள்.. 20 பேர் மாயம்!!

டோக்கியோ: ஜப்பானில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தலைநகர் டோக்கியோவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள Shizuoka பகுதிக்கு உட்பட்ட அடாமி நகரில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் உருவான சேரும் சகதியும் குடியிருப்புகளை அப்படியே மூழ்க செய்தது. அப்பகுதியில் இருந்த குடியிருப்புகள் அனைத்தும் மண்ணில் புதைந்தது. அங்கு வசித்து வந்த 20 பேரை காணவில்லை.

நிலச்சரிவில் சிக்கி மாயமான 20 பேரை தேடும் பணியில் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் அடாமி நகர் முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனிடையே கனமழையால் ஜப்பானில் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் வெள்ளநீர் மொத்தமாக அந்த பகுதியில் உள்ள வீடுகளை அடித்துச் செல்லும் காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.கல், மண், பாறை என அனைத்தையும் உருட்டிக் கொண்டு வந்த அந்த கட்டாற்று வெள்ளம் கட்டிடங்களை நொருக்கி இழுத்துச் செல்லும் காட்சிகள் மனதை பதைபதைக்க வைத்துள்ளது.


Tags : Japan , மின்கம்பங்கள்
× RELATED மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட...