×

குன்னூரில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆய்வு

குன்னூர்:  குன்னூரில் ஆற்றுநீரில் கழிவுகள் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆய்வு பணி நேற்று நடைெபற்றது. நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை சுத்திகரிக்க  இதுவரை பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை.  இதனால் வீடு, மார்க்கெட் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் சிற்றாறுகள் மற்றும் ஓடைகளில் கலந்து வருவதால் நீர்மாசு ஏற்பட்டு வருகிறது. இதனைதடுக்க சமூக ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, சென்னையில் இருந்து வந்த ஆய்வுக்குழுவினர் குன்னூர் ஆறுகளில் ஆய்வு மேற்கொண்டனர். நகராட்சி கமிஷனர் பாலமுருகன், சுகாதார ஆய்வாளர் மால்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள்  உடனிருந்தனர். இதில், ஆறுகளில் அளவீடு செய்யப்பட்டு எந்தெந்த பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஏற்படுத்துவது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

நகராட்சியில் 21 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அறிக்கை தயார் செய்து தமிழக அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. இதன் அடிப்படையில் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Coonoor , Coonoor, Refinery, Inspection
× RELATED குன்னூர் அருகே குடியிருப்பு...