×

மத்திய பிரதேசத்தில் இளம்பெண்ணை மரத்தில் கட்டித் தொங்கவிட்டு கம்பால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய தந்தை, 2 சகோதரர்கள்!!

போபால் :மத்திய பிரதேசத்தில் இளம்பெண்ணை மரத்தில் தொங்கவிட்டு குடும்பத்தினரே கொடூரமாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலிராஜ்பூர் மாவட்டத்தில் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் Badi Phul Talaw கிராமத்தில் இந்த காட்டுமிராண்டித்தனமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணமான 19 வயது பெண் கணவர் வீட்டில் இருந்து வெளியேறி உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் அப்பெண்ணை மரத்தில் தொங்கவைத்து கம்பால் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

அந்த வீடியோவில் கிராமத்தினர் அனைவரும் வேடிக்கை பார்க்க இளம்பெண்ணை தந்தையும் 3 சகோதரர்களும் வேறு சிலரும் சேர்ந்து ஈவு இரக்கமின்றி அடித்து சித்ரவதை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்த போலீசார் இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.படுகாயம் அடைந்த பெண் உயிருக்கு போராடி வருகிறார்.குடும்பத்தினர் அனைவரும் கைது செய்யப்பட்டதை அலிராஜ்ப்பூர் மாவட்ட எஸ்.பி. உறுதி செய்துள்ளார்.இந்த தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் அடிப்படையில் பெண்ணின் தந்தை, சகோதரன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Madhya Pradesh ,Gampal , அலிராஜ்பூர்
× RELATED மத்தியபிரதேசத்தில் விளையாட்டின்போது இளைஞருக்கு நேர்ந்த சோகம்