×

பல்லாயிரம் கோடி இழப்பை ஈடுகட்ட ஸ்மார்ட் மீட்டராக மாற்ற நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

திருப்பரங்குன்றம்: மதுரையில்  நேற்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: கிராமப்புறங்களில் புதிதாக மின் இணைப்பை பெறுபவர்களுக்கு மின்கம்பம், மின் மாற்றியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான செலவு தொகையை மின் நுகர்வோரிடம் பெறும் நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது. மின்சார இழப்பு அதிகமாக உள்ளதால் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை சரி செய்ய மின் கணக்கீடு செய்யும் முறையை, டிஜிட்டல் மீட்டரில் இருந்து ஸ்மார்ட் மீட்டர் முறையாக மாற்றம் செய்ய சிறப்பு கவனம் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Minister ,Senthilpalaji , Measures to convert billions into smart meters to offset losses: Interview with Minister Senthilpalaji
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...