×

இன்டர்நெட் மூலம் வெளிநாட்டுகளுக்கு அடிக்கடி தொடர்பு கடலூர் அருகே சிக்கிய 5 பேர் வங்கதேச தீவிரவாதிகளா? மத்திய உளவுத்துறை தீவிர விசாரணை

கடலூர்: கடலூர் அருகே பெரியகங்கனாங்குப்பத்தில் தங்கியிருந்தது தீவிரவாதிகளா என 5 பேரை பிடித்து மத்திய உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடலூர் அருகே உள்ளது பெரிய கங்கனாங்குப்பம் கிராமம். இப்பகுதியில் இருந்து வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாட்டுகளுக்கு அடிக்கடி தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உதவியுடன் இன்டர்நெட் வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தொடர்பு குறித்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சந்தேகத்தின்பேரில் மத்திய உளவுத்துறையின் சென்னை மற்றும் கடலூர் கண்காணிப்பு பிரிவு போலீசார், கடலூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில்,  டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர் மேற்பார்வையில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

 அப்போது பெரியகங்கனாங்குப்பம் கிராமத்தில் விநாயகா நகர் பகுதியில் சிலரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த வீட்டில் வசித்தவர்களை நேற்று பிற்பகல் கடலூர் ஆள்பேட்டை மேம்பாலத்தில் இருந்து பின்தொடர்ந்தனர். பின்னர், அவர்களது வீட்டிற்குள் சென்றதும் சுற்றிவளைத்து பிடித்தனர். இதில் மூன்று ஆண், 2 பெண் மற்றும் குழந்தை என அனைவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தி, வங்க மொழியில் மட்டுமே பேசியுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ள அழைத்துச்சென்றனர்.

இதுதொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் முறைகேடாக மேற்குவங்கம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருகின்றனர். இதுபோன்று பிடிபட்ட நபர்களும் வந்து தங்கி இருக்கலாம். இவர்களுக்கு பெரியகங்கனாங்குப்பத்தில் இருந்து வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இன்டர்நெட் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய உளவுத்துறை போலீசார் தகவலின் பேரில் இவர்களை பிடித்துள்ளோம் என்று தெரிவித்தனர். மேலும், பிடிபட்டவர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்களா?, தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களா என்பது தொடர்பாகவும் மத்திய உளவுதுறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags : Cuddalore ,Central Intelligence , Are 5 Bangladeshi militants stranded near Cuddalore frequently exposed to foreigners through internet? Central Intelligence Intensive Investigation
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!