×

இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படத்தை இயக்க இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்க முடியாது: மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை  சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வந்த  இந்தியன் 2 திரைப்படத்தின்   படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, லைக்கா தரப்பில் ஆஜரான வக்கீல், படத்திற்கு முதலில் 150 கோடி ரூபாய் பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும், ஆனாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருப்பதாக தெரிவிக்கபட்டது.

இயக்குனர் சங்கருக்கு ஏற்கனவே 32 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதத்தொகையை வழங்கவும் தயாராக இருப்பதாகவும், கடந்த மார்ச் மாதத்துக்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் இன்னும் படத்தை முடிக்காததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.  இயக்குனர் ஷங்கர் தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், சாய்குமரன் ஆஜராகி, படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என்று பட்ஜெட் போட்ட நிலையில், அதை குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியது. படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமத்தை லைகா நிறுவனம் ஏற்படுத்தியது.

அரங்குகள் அமைப்பது, நிதி ஒதுக்கீடு போன்றவற்றில் தாமதம் செய்ததாலும், கொரோனா ஊரடங்கு, படப்பிடிப்பில் விபத்து, நடிகர் கமலுக்கு அலர்ஜி போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானது. படப்பிடிப்பை மீண்டும் துவங்கினால் வரும் அக்டோபர்  மாதத்திற்குள் படத்தை முடித்து கொடுக்க தயார் என்று வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Shankar ,iCourt , Director Shankar cannot be barred from directing another film without completing Indian 2: ICC dismisses petition
× RELATED இயக்குநர் சங்கரின் மகள் திருமண...