ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறைவாசம் முடிந்தது சவுதாலா விடுதலை

புதுடெல்லி: அரியானாவில் கடந்த 2000ம் ஆண்டில் இளநிலை அடிப்படை பயிற்சி ஆசிரியர்கள் நியமனத்தில் 3,206 பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அப்போதைய முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா, ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் குமார் உள்பட 53 பேர் கடந்த 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சவுதாலா, அவரது மகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக, சவுதாலா கடந்தாண்டு மார்ச் முதல் பரோலில் உள்ளார். இந்நிலையில், 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 6 மாதம் முன்னதாக விடுதலை செய்யப்படுவதாக டெல்லி அரசு கடந்த மாதம் அறிவித்தது. இதன்படி, சவுதாலாவின் 10 ஆண்டு சிறை தண்டனை முடிவுக்கு வந்தது. முறைப்படி நேற்று திகார் சிறை அதிகாரிகளிடம் சரணடைந்த அவரை, அதிகாரிகள் விடுதலை செய்தனர். அவரை இந்திய தேசிய லோக்தளம் கட்சியினர் ஆரவாரமாக வரவேற்று அழைத்துச் சென்றனர்.

Related Stories: