×

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவனை அரியானாவில் இருந்து சென்னை அழைத்து வந்தனர்

சென்னை: எஸ்பிஐ ஏடிஎம்மில் கைவரிசை காட்டிய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியை அரியானாவில் இருந்து தனிப்படை போலீசார் சென்னை அழைத்து வந்தனர். மற்றவர்களை கைது செய்ய தனிப்படையினர் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் ராமபுரம், விருகம்பாக்கம், வேளச்சேரி உள்பட 15 இடங்களில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தின் டெபாசிட் இயந்திரத்தில்ரூ.45 லட்சத்துக்கு ேமல் பணம் மாயமானது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின்படி கூடுதல் கமிஷனர் கண்ணன், தி.நகர் துணை கமிஷனர் அரிகிரன் பிரசாத் தலைமையில் தனிப்படை அமைத்து,  அரியானா மாநிலம் சென்று அங்குள்ள போலீசார் உதவியுடன் கடந்த 23ம்தேதி அமீர் அர்ஷ் என்பவனை கைது செய்தனர்.

அவனிடம் இருந்துரூ.4.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அமீர் அர்ஷ் அளித்த தகவலின் படி அரியானா மாநிலம் பல்லப்கர்க் பகுதியை ேசர்ந்த வீரேந்திர ராவத்(23),  நஜீம் உசேன் ஆகியோரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் தரமணி போலீசார் வீரேந்திர ராவத்தை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். இந்நிலையில் இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்னர். அவனை விமானம் மூலம் நேற்று இரவு 9 மணிக்கு சென்னை அழைத்து வந்தனர்.


Tags : SBI ATM ,Chennai ,Haryana , The leader of the SBI ATM robbery gang was brought to Chennai from Haryana
× RELATED ஹரியானாவில் இருந்து பாஜக கொடி, தாமரை...