சோக்சியை கடத்தியது நாங்களா? டொமினிக்கா பிரதமர் ஆவேசம்

புதுடெல்லி: இந்திய வைர வியாபாரி மெகுல் சோக்சியும், நீரவ் மோடியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் வாங்கி மோசடி செய்து விட்டு வெளிநாடு தப்பினர். இவர்களில் ஆன்டிகுவா நாட்டில் வசித்து வரும் சோக்சி, டொமினிக்கா நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக, கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்திய, டொமினிக்கா அரசுகள் திட்டமிட்டே கடத்தி விட்டதாக சோக்சியின் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இது பற்றி டொமினிக்கா பிரதமர் ரூஸ்வெல்ட் கூறுகையில், `சோக்சி கடத்தலில் டொமினிக்கா அரசுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது முட்டாள்தனமானது. இந்த கீழ்தரமான செயலை நாங்கள் செய்ய மாட்டோம்,’’ என்றார்.

Related Stories:

>