×

விர்ஜின் கேலக்டிக் விண்கலத்தில் விண்வெளிக்கு செல்லும் ஆந்திர பெண் விஞ்ஞானி

கேப் கேனாவரல்: மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் போட்டியில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் புளூ ஆரிஜின் நிறுவனம் மற்றும் தொழிலதிபர் ரிச்சர்டு பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வரும் செப்டம்பரில் முதல் முறையாக தனியார் விண்கலம் மூலம் மக்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்கிறது. பெசோஸ் நிறுவனம் வரும் 20ம் தேதி முதல் முறையாக மனிதர்களை ஏற்றிக் கொண்டு சோதனை ஓட்டமாக விண்வெளிக்கு விண்கலத்தை  அனுப்புகிறது. இதில், பெசோஸ், அவரது சகோதரர் உள்ளிட்டோர் பயணம் செய்ய உள்ளனர்.

இந்நிலையில், விண்வெளிக்கு பயணிப்பதில் தற்போது பெசோசை முந்த இருக்கிறார் சக போட்டியாளர் பிரான்சன். இவரது நிறுவனம் வரும் 11ம் தேதியே விண்வெளிக்கு விண்கலத்தை அனுப்ப இருப்பதாக அறிவித்துள்ளது. அதில், பிரான்சன், ஆந்திராவை சேர்ந்த சிரிஷா பண்ட்லா உட்பட 6 பேர் செல்கின்றனர். ஆவார். டெக்சாஸ், ஹூஸ்டனில் வளர்ந்த இந்திய வம்சாவளியான சிரிஷா ஜார்ஜ், வாஷிங்டன் பல்கலையில் எம்பிஏ பட்டம் பெற்றவர். விர்ஜின் கேலக்டிக்கில் பணியாற்றி வரும் இவர், விண்வெளி திட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்.


Tags : AP ,Virgin Galactic , Andhra Pradesh female scientist goes into space aboard the Virgin Galactic spacecraft
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?