×

விம்பிள்டன் டென்னிஸ் 4வது சுற்றில் ஸ்வியாடெக்

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் ஐரினா கேமலியா பேகுவுடன் (30 வயது, 79வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் (20 வயது, 7வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-1, 6-0 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 55 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.முன்னணி வீராங்கனைகள் கரோலினா பிளிஸ்கோவா (செக்.), சபலென்கா (பெலாரஸ்), ரைபாகினா (கஜகஸ்தான்) ஆகியோரும் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். சானியா வெற்றி: கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று களமிறங்கிய சானியா - போபண்ணா ஜோடி 6-2, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் ராம்குமார் ராமநாதன் - அங்கிதா ரெய்னா சக இந்திய ஜோடியை வீழ்த்தியது. சானியா ஏற்கனவே மகளிர் இரட்டையர் பிரிவிலும் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : SwiTech ,Wimbledon , SwiTech in the 4th round of Wimbledon Tennis
× RELATED விம்பிள்டன் இறுதிப்போட்டியில்...