×

சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

சென்னை: இடைநீக்கம் செய்யப்பட்ட சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனின் சென்னை சாலிகிராமம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். லஞ்ச புகாரில் சிக்கியிருக்கக்கூடிய சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இரண்டாவது முறையாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனின் அலுவலகம், வீடு, அதேபோல புதுக்கோட்டையில் உள்ள வீடு என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் 3 கோடி மதிப்புடைய தங்கம், வைரம் மற்றும் வெள்ளி பொருட்கள், 1 கோடியே 37 லட்சம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

லஞ்ச புகாரில் சிக்கி இருக்கக்கூடிய பாண்டியனின் சொத்து ஆவணங்கள் ஏற்கனவே கைப்பற்றப்பட்டு இருந்தது. 10 மடங்கு சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரிய வந்திருந்தது. இந்த நிலையில் அவருடைய சொத்து ஆவணங்கள் தொடர்பான ஆதாரங்களை திரட்டக்கூடிய பணியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்காக இன்றும் மீண்டும் சாலிகிராமத்தில் இருக்கக்கூடிய அவருடைய வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

10 லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கான ஆதாரங்கள் திரட்டக்கூடிய பணி நடந்து வருகிறது. அதற்காக தான் இந்த சோதனையும் நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



Tags : Environment Department ,Superintendent ,Pandian , Anti-corruption
× RELATED கோடை சீசன் மற்றும் மலர்கண்காட்சி...