இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் டிரோன்: பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் !

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வளாகத்தில் விதிமுறைகளை மீறி அந்நாட்டுக்கு சொந்தமான டிரோன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, இது பாதுகாப்பு விதிமுறைகளை மீறியது என தெரிவித்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் டுரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்கு, பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என காஷ்மீர் போலீசார், பாதுகாப்பு படையினர் மற்றும் உளவுத்துறையிருக்கு  சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் டுரோன் பறந்துள்ளது நிலைமையை மேலும் சிக்கலாக்கி உள்ளது. கடந்த சில வருடங்களாக, டுரோன் மூலம் எல்லைப்பகுதிகளில், டுரோனை பயன்படுத்தி ஆயுதங்களை கடத்துவதாக பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எல்லைப் பகுதிகளில் டுரோன்கள் காணப்பட்டதாகவும், சில டுரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் எல்லை பாதுகாப்பு படை தெரிவித்திருந்தது. தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டில், அமிர்தசரசில் உள்ள கிராமத்தில், நொறுங்கிய நிலையில் டுரோன் கண்டுபிடிக்கப்பட்டது. சில மாதங்களில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் டுரோன்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதை மருந்து கடத்தியதை ஒப்பு கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>