×

கல்வித்துறை உள்ளிட்ட பல துறைகள் குறித்து வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமெரிக்க-இந்திய ஆலோசனைக் கூட்டம்

வாஷிங்டன்: அமெரிக்க நாட்டின்  இந்திய தூதரான தரன்ஜித் சிங் சாந்து. இவர், சமீபத்தில் அமெரிக்க  மற்றும் இந்தியா இடையேயான நட்புறவை பலப்படுத்த முக்கியக் கூட்டமொன்றில் கலந்து கொண்டார். இரு நாட்டு முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டம் குறித்து இந்திய தூதரான தரன்ஜித் சிங் சாந்து செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து அவர் பேசியதாவது: மிகவும் ஓர் மகிழ்ச்சியான கலந்துரையாடலாக இது நிகழ்ந்தது என்று தெரிவித்தார். தனது டிவிட்டர் பக்கத்திலும் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார். வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் இருக்கும் எய்சன்ஹவர் தலைமை அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் சுகாதாரத் துறை, கனிமவளத்துறை, சுற்றுச்சூழல் துறை, ஐடி தொழில்நுட்பம், கல்வித்துறை உள்ளிட்ட பல துறைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் இந்தியா சார்பாக கலந்துகொள்ளும் முக்கிய அதிகாரி சாந்து ஆவார். புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த இந்தியர் பிரியா தான்யா இந்த ஆண்டுக்கான வெள்ளை மாளிகையின் இந்தியர் என்ற கவுரவத்தைப் பெற்றுள்ளார்.

இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு சார்ந்த கூட்டுறவு அமைப்பான இண்ட்கோசர்வ் நிறுவனம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து  இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு சார்ந்த கூட்டுறவு அமைப்பான இண்ட்கோசர்வ் நிறுவனம் பெற்ற நியாய வர்த்தகச் சான்றிதழை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Tags : US ,India ,White House ,Washington , White House, US-India, Consultative Meeting
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...