விம்பிள்டன் டென்னிஸ்; 3வது சுற்றில் கெர்பர், கோகா காப்: எலினா ஸ்விடோலினா வெளியேற்றம்

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று 2வது சுற்று போட்டிகள் நடந்தது. 25ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 7-5, 5-7, 6-4 என்ற செட் கணக்கில், ஸ்பெயினின் சாரா டார்மோவை வீழ்த்தினார். அமெரிக்காவின் 17 வயதான கோகோ காப் 6-4, 6-3 என ரஷ்யாவின் எலெனா வெஸ்னினாவை வென்றார். லாட்வியாவின் எலெனா ஓஸ்டாபென்கோ 6-1, 3-6, 8-6 என ரஷ்யாவின் டாரியா கசட்கினாவை சாய்த்தார்.

நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி, பெலாரசின் சாஸ்னோவிச், இங்கிலாந்தின் எம்மா ராடுகானு உள்ளிட்டோரும் 2வது சுற்றில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்குள் நுழைந்தனர். பெலாரசின் விக்டோரியா அசரென்கா, 3ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, கிரீஸ் நாட்டின் மரியா சக்கரி உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் 2வது சுற்றில் தோற்று வெளியேறினர். ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7-6, 6-1, 6-4 என பிரான்சின் ரிச்சர்ட் கேஸ்கெட்டை வீழ்த்தி 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

குரோஷியாவின் மரின் சிலிச், 2ம் நிலை வீரரான ரஷி்யாவின் டேனியல் மெட்வதேவ்,ஆகியோரும் 3வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

Related Stories: