×

வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டது. இது வன்னியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும் பல்வேறு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட உள்ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. முழுமையான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படாமல் குறிப்பிட்ட பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க முடியாது. தமிழக அரசின் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். இதனையடுத்து, 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வன்னியர் சமுதாயத்திற்கு வழங்குவதற்கு எதிராக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. தற்போது, சென்னையைச் சேர்ந்த சந்தீப் குமார் மற்றும் சிவகங்கையை சேர்ந்த முத்துகுமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதற்கிடையில் சென்னையை சேர்ந்த சந்தீப்குமார், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் ஆகிய இருவரும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கலானது செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிலையில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் நாகமுத்து அவர்கள், இந்த விவகாரம் மிகவும் முக்கியமானது. இந்த வழக்கை நீங்கள் உடனடியாக விசாரிக்க வேண்டும். உள் ஒதுக்கீடு சட்டத்தை தாங்கள் படித்து பார்த்ததாகவும் அதற்கு தடைவிதிக்க போவதில்லை என்றும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர். அதிமுக ஆட்சியின் போது வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து அரசாணை நிறைவேற்றப்பட்டது.

Tags : Vanniyar ,Supreme Court , Vanniyar quota, Supreme Court, denial
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...